என்ன தவம் செய்தேனோ
வலி கொடுத்த என்னை கண் திறந்த கணமே முத்தமிட்டு மகிழ்ந்தாயே
உன் இரத்தத்தை உணவாகக் கொடுத்து உன் பசி மறந்தாயே
தூழி கட்டி ஆரரிரோ பாடி
உன் இமை மூடாது ரசித்தாயே
கருவிழியென எண்ணி
உன் இமை கொண்டு என்னை காத்தாயே
என் ஆசைகளை உன் ஆசையென நிறைவேற்றி மகிழ்வாயே
அம்மா....
உன் பிள்ளையாக பிறந்திட
நான் என்ன தவம் செய்தேனோ!