காதலி
இயல்பாக இருந்த என்னை
இனியவனாக மாற்றியவளே..
அன்புக் கருவறையில் என்னை
அடக்கியவளே..
பாசம் என்ற வேலியால் என்னை
போர்த்தியவளே..
உன் சிந்தனையை மட்டும்
எனக்கு பரிசளித்தவளே..
பிரிவின் அர்த்தத்தை எனக்கு
விளங்க செய்தவளே..
இத்தனை பரிசு தந்த நீ
இறுதியில் ஏன் தோல்வி என்ற பெரும்
பரிசு தந்தாய்...
-முஹைதீன்-

