இன்றைய கிள்ளைகள்

பள்ளிக்கூடம் போகையிலே

பட்டாம் பூச்சி பிடித்து கொண்டும்

பாதையோர செடி கிள்ளி

தோழி மீது அடித்து கொண்டும்

போகும் வரும் வாகனத்தை

டாட்டா சொல்லி சிரித்து கொண்டும்

மச்சு வீட்டின் மேலமர்ந்த

குருவியோடு பேசிக்கொண்டும்

ஆகாயத்தில் சத்தமிடும்

விமானத்தை பார்த்து கொண்டும் ,

கொண்டாடி பள்ளி சென்ற

காலமெல்லாம் போயாச்சு...-இப்ப

தேச்சு வச்ச சீருடைய

தவறாம போட்டுக்கிட்டு

காத்தோட்டம் இல்லாத

காலனியை அணிஞ்சுகிட்டு

புதுப்புது பிரிவுகளில்

புத்தகம் சுமந்துகிட்டு

ஒன்பது மணி பள்ளிக்கு

எட்டுக்கே வண்டி ஏறி

வருவதென்ன போவதென்ன

நடப்பதென்ன நடந்ததென்ன

எதுவுமே தெரியாமல்

ஏட்டில் மட்டும் உலகு படித்து

ஏங்குகின்றன கிள்ளைகள்.

எழுதியவர் : சுப ஜோதி (13-Oct-12, 9:22 am)
சேர்த்தது : supa jothi
பார்வை : 129

மேலே