கற்பை மட்டும் தான் இழந்தேன். . . . .

கற்பை மட்டும் தான் இழந்தேன்
என் வாழ்வு இருக்கிறது என்னோடு
இமயத்தை வெல்லும் துணிச்சலோடு
இளமை இருக்கிறது என்னோடு

இழந்த கற்புக்காக என் வாழ்வை
இழக்க நான் கோழை அல்ல
இன்றைய சரித்திரத்தை
இப்போதே சீராக்க வேண்டும்

என் போன்றவர்களின் மெளனம்
உன் போன்றவர்களின் ஆயுதம்
மன்னிப்பு பாவிகளை வளர்ப்பதால்
என்னால் மன்னிக்க முடியாது

தப்பு செய்த நீயே
தலை நிமிர்ந்து நடக்கும் போது
தப்பே செய்யாமல்
நான் தலை குனிய மாட்டேன்

சமூகத்தின் கிசு கிசு க்கு
காது கொடுக்க நேரமில்லை
சமூகத்தின் சில இடைவெளிகள்
நிரப்பப் பட வேண்டும் என்னால்

காம வெறி கொண்ட கயவர்களை
தர்மத்தின் துப்பாக்கி ஏந்தி
சுட்டு வீழ்த்த துடிக்கிறது
என் பிஞ்சு கரங்கள்

நான் வீழா மாட்டேன்
நான் வாழ்வேன்
உன்னை வீழ்த்தும் வரை
ஓயவும் மாட்டேன்

என் இலட்சிய பயணத்தில்
துணிவும் நம்பிக்கையும்
கொண்ட எவராவது இருந்தால்
என்னோடு இணைந்து கொள்ளலாம்

( எஸ். கலையின் கவிதையை படித்த பின்
எழுந்த என் மன குமுறல்களை கவிதையாக
எழுதி இருக்கிறேன் )

எழுதியவர் : பாத்திமா ஹானா (14-Oct-12, 3:18 pm)
பார்வை : 296

மேலே