சுமக்கிறேன் நான் ஏக்கத்தோடு...!
புழுதியை
சுமந்து
விளையாடிய
நாட்களில்
புத்தகத்தைச்
சுமக்க வேண்டுமென்று
நான் ஆசைப்பட்டதில்லை...!
கட்டுக் கட்டாக
சுமக்கிறேன்
செய்தித் தாள்களை
படிக்கத் தெரியவில்லையே
என்ற ஏக்கத்தோடு...!

