உனக்காக காத்திருக்கிறேன்!

பலநாட்கள்
தூக்கம் தொலைத்து
பைத்தியம் போல்
சுற்றித் திரிகிறேன்!
பத்து மாத
வேதனை
தாயவள்
தன பிள்ளையின்
பிஞ்சு முகம்
காணத் துடிக்கும்
அந்தத் துடிப்பு...!
காதலை சொல்லிவிட்டு
காதலியின்
ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கும்
காதலனின் தவிப்பு...!
நிமிடத்திற்கு
72 முறை
துடிக்கும்
இதயம் கூட
ஏனோ
720 முறை
துடிப்பது போன்ற
உணர்வு...!
எனது பெயர்
கல்வெட்டில்
பொறிக்கப் பட
வேண்டி நான்
தவிக்கவில்லை...!
கூட்டத்தில்
ஒருவனாக
வந்தால் கூட
போதும்
அப்பாவின்
திட்டிலிருந்து
தப்பித்துக் கொள்ளலாம்...!
தேர்வு முடிவை
எதிர் பார்த்துக்
காத்திருக்கும்
மாணவனின் மனக்குமுறல்...!