மனித தேவையின் விளைவு

இயற்கை மனிதனுக்குக் கொடுத்தது
பலவற்றை - மனிதன்
இயற்கையிடம் களவாட ஆரம்பித்தான்
சிலவற்றை - சில
இரசாயனங்களைக் கூட்டுச் சேர்த்து
இயற்கையிடம் போர் தொடுத்தான்
பஞ்ச பூதங்களையும் மிஞ்ச
என்ன வழி யோசித்தான் ஆனாலும்
இன்றுவரை யாசிக்கத்தான் செய்கிறான்
இயற்கையிடம் சிலவற்றை ......

தேவையின் நீளங்களில் தீவிர
ஓடுதலை ஆரம்பித்தான்
தற்போது தாகத்திற்கு தண்ணீரில்லை.....
மூச்சிரைக்கிறான்
நல்ல காற்று சுவாசிக்கயில்லை .....
பரந்த ஆகாயத்தைப் பார்க்கிறான்
ஓசோன் ஓட்டையும் அவனை
ஏளனம் செய்கிறது ..........

தொலைதூர மேகத்திலிருந்து பயணித்த
மழைத்துளி கண்டு நாவை நீட்டுகிறான்
பாவம் .அமில மழை அது
வெந்து போன நாவை கண்டு
நொந்து கொள்கிறான் .......

நேரடி சூரியக்கதிரிடம் சிறைபடும் அவன்
இனியாவது சிந்திப்பானா தன்தேவையை எல்லையில்லா கோட்டிலிருந்து
எல்லைக்குட்பட்ட
கோட்டுத்துண்டு ஆக்குவானா ?

எழுதியவர் : த.மலைமன்னன் (19-Oct-12, 11:45 am)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 148

மேலே