இரவில் வானவில்
:
ஒரு சாண் வயிறு படும் பாட்டிற்காக
எண் சாண் சரீரம்
வண்ண விளக்கொளியில்
சில சாண் அங்கங்களின்
சதையைக்காட்டும் .....!
நடனம் தெரியாவிட்டாலும்
இருபால்கள் இறுக்கமாக நெருக்கமாகி
ஒரு நடிப்பு நடனம் பார்வையாளனின்
ஒரு வித பசி தீர்க்க .....!
சில ஏளனப் பேச்சுக்களைக்
காதுகள் கேட்டு கலங்கி நிற்கும்
கண்ணீர்த் துளிகளை - நம்
வக்கிர பார்வை ஒளி
ஒளிச்சிதறல் செய்ய
இரவில் ஒரு வானவில்
திருவிழாக் காலங்களில் ......!