வாழ்க்கை தேர்வறையில் இப்படியும் சிலபேர்......

வாழ்க்கை தேர்வறையில் இப்படியும் சிலபேர்
*முதல் வரிசையில்
தனக்கு தெரிந்ததை
மிகவும் அழகான
கை எழுத்தில்
அமைதியாய்
எழுதும்
அன்பரசு ..
*கிடைத்த மதிப்பெண்
போதுமென்று தெரிந்தது
தெரியாதது பற்றி
தப்பும் தவறுமாய்
தேர்வெழுதும்
வசந்தன் .........
*பக்கதிலிருப்பவனிடம்
தனக்கு தெரியாததை
காட்டி உதவும் படி
கெஞ்சும்
குணா.......
*யாருடைய
தயவுமின்றி தானே
எழுதிய பிட்டில்
அழகாய் தேர்வெழுதி
மாட்டி விடாமல்
தப்பிக்கும்
கமலன்......
*யாரோ போட்ட
வேஸ்ட் பேப்பரை
பிட் என கருதிய
ஆய்வாளரிடம்
மாட்டி கொண்டு
முழிக்கும்
வித்யா தரன் ......
*வாழ்க்கை
தேர்வறையில்
இப்படியும்
சிலபேர்.........