##### குடிகாரனின் பொண்டாட்டி #####
குடிக்கிறான் தினம் தினம்
குமுறுகிறேன் நான் தினம்
குருவிக்கூடு போல வீடிருக்கு
குடிப்பழக்கம் ஏன் உனக்கு
தினமும் அதிகாலையிலே
திறந்த வெளிப்பாதையிலே
திண்டாடி நடந்து வரான்
தள்ளாடி விழுந்து வரான்
அல்லும் பகலும் உறக்கமில்லை
அன்பு மனம் உனக்கு இல்லை
அழகான குடும்பம் இருக்கு-அதை
அழ வைக்கும் குணம் உனக்கு
உன்ன நம்பி கழுத்த நீட்டி
என்கால் விரலில் மெட்டி மாட்டி
வாழரன் தினமும் மல்லுக்கட்டி-கணவனுடன்
வாழ்கின்ற வாழாவெட்டி
மஞ்சத்தாலி என் கழுத்துல
பச்சப்புள்ள என் வயித்துல
அழுகிப்போன உன் மனசுல-என்
அன்புக்கு கொஞ்சம் கூட இடமில்ல
திருமணமான முதலிரவில்
தித்திக்கும் பல சுகங்கள்
தினந்தோறும் பல இதங்கள்
திரும்பி வருமா அந்நாள் போல
திருந்தி வா நீ அது போல