ஆதலால், தேடினேன்

உடல் படைத்ததில் தவறில்லை,
அதனில் உணர்வுகள் ஒன்றை வித்திட்டது யார்?
வித்தொன்றினால்,
விளைநிலமாகாமல்,
வறண்ட தேசத்தில்
கண்ணீர் பாய்ச்சி,
உயிர் வளர்க்க சொன்னது யார்?
உள்ளம் பார்க்காது,
உருவம் பார்க்கத்தானா,
விழிகள் பார்வை கொண்டன.
வினாக்கள் தொடுத்தால்,
விடை பகிர்வது அரிதாகி போகுமோ?
அலட்சியங்கள் ஆட்கொள்ளுமோ?
பதில்கள் தெரியவில்லை,
ஆதலால் தேடினேன்.

எழுதியவர் : நிஷா (24-Oct-12, 7:21 pm)
சேர்த்தது : jasminenisha
பார்வை : 121

மேலே