வறுமை

பெற்றோர்கள் சில நாட்கள் பட்டினியில் வாடும் பொழுது
விரதம் இருந்து ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்
என் பெற்றோருக்கு தினமும் உணவு கிடைக்க வேண்டும் என்று
நான் கருவறையில் இருக்கும் பொழுது

முதலில் சந்திக்கும் கால்களையே
கடிக்கும் பழக்கம் காலணிகளுக்கு இருப்பதால்
நான் அணியும் காலணிகள் என்னை கடிப்பதில்லை

பெற்றோருக்கு, சோறுபோட வேண்டும் என்று
நான் சுத்தம் செய்த வகுப்பறையில் அமர்ந்து கொண்டு
மாணவர்கள் கற்றனர், சுத்தம் சோறுபோடும் என்று

சிறு வயதில் நான் விளையாடிய
அணைத்து பொம்மைகளும் மாற்றுத்திரனாளிகள்

கண்ணதாசனுடன் பழகிய மை அவரை உயர்த்தியது
என்னுடன் பழகிய மை என்னை வாட்டியது
காரணம், கண்ணதாசனுடன் பழகிய மை பேனா மை
என்னுடன் பழகிய மை வறுமை

காமராஜருடன் பழகிய மை அவரை உயர்த்தியது
என்னுடன் பழகிய மை என்னை வாட்டியது
காரணம், காமராஜருடன் பழகிய மை நேர்மை
என்னுடன் பழகிய மை வறுமை

இதுவரை சிலவகை உணவு வகைகள்
என்னை சந்திக்கும் வாய்ப்பை வாய்க்குக் கொடுக்காமல்
மூக்கிற்கே கொடுக்கின்றன

எழுதியவர் : லால்குடி மா. பொன்ராஜ் (2-Nov-12, 1:26 pm)
சேர்த்தது : Lalgudi Ponraj
Tanglish : varumai
பார்வை : 271

சிறந்த கவிதைகள்

மேலே