மனநலவாதிகள்!

இன்றைய உலகில் ....
மனம் பாதிக்கப்பட்டு மனநலவாதியாய்
அழைகின்றனர் ஒருசிலர் !
அந்த மனமே தொலைத்து சுயநலவாதியாய்
அழைகின்றனர் வெகுபலர் !
பாவம் தெரியாமல் உடைகளில் அங்கங்குகிழித்துக்கொண்டு திரிபவர்கள் பைத்தியக்காரர்கள் !
மாடல் என்று சொல்லி அங்கம் தெரிய
ஆடையணிந்து இல்லை இல்லை அவிழ்த்துவிட்டு திரிபவர்கள் நாகரிக கால மனிதர்கள் !
ஓடும் அவசரத்தில் வீட்டின் குப்பையை
மூட்டைகட்டி வீதியில் வீசி எரிந்து
போகுபவர்கள் அவசரபணியாளர்கள்!
வீதிவீதியாய் குப்பையை எடுத்து மூட்டைகட்டி
அதை வீதியில் போடா முடியாமல் கையில் வைத்து திரிபவர்கள் அபச்சாரத்திர்க்குரியவர்கள் !
உன் ஆடம்பரவசதிக்கு உன் மேலதிகாரியிடம்
நீ பெற்றால் கடன் !
என் அடிப்படை வசதிக்காக உன்னிடம்
நான் பெற்றால் பிச்சை !
உண்மையில் இவுலகில் மனநலம் பாதிக்கபட்டுதான் இருக்கிறோம் மனநலவாதியாய்!