மமதா பானர்ஜி - வைக்கோ சந்திப்பு..? இந்திய தேசியத் தலைவர் ஆகிறாரா வைக்கோ அவர்கள்..?

இன்றைய தமிழகத்தில், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு அரசியல் கட்சியாக ம.தி.மு.க. இருக்கிறது என்று நம்ப முடியுமா..? அப்படி ஒரு வாய்ப்பு திரு.வைக்கோ அவர்களுக்கு மிகப் பிரகாசமாக உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிங்கூர் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மமதா பானர்ஜி அவர்கள் தொடர்ந்து போராடிய பொழுது, திரு வைக்கோ அவர்கள் மேற்கு வங்கம் சென்று தனது ஆதரவை மமதா அவர்களுக்கு வழங்கினார். வரும் ஜனவரி 23 -ம தேதி நேதாஜி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள திரு வைக்கோ அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் அவர்கள்.

ஈழப் பிரச்சனையை வைத்து டெசோ மாநாடு நடத்தி, தனது தேசிய அரசியல் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக்கொண்ட தி.மு.க.,கவின்
மு.கருணாநிதி எவ்வாறு காய் நகர்த்தினாரோ, அதைப்போன்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி அவர்களும் இந்த ஜனவரி மாத நேதாஜி அவர்களின் பிறந்த நாள் விழாவில், தனக்கு உடன்பட்டு வரும், தனது அணியில் சேர்வதற்கு முணைப்பாக, அகில இந்திய அளவில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வைக்கோ அவர்களை அழைத்துள்ளார் மமதா அவர்கள். வைக்கோஅவர்களும் நேத்தாஜி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் உரிமைகள் அனைத்தையும் பறித்துக்கொண்டு, மத்தியில் ஆளும் அதிகார அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டு அல்ல, கிட்டத்தட்ட அணைத்து மாநிலங்களுக்கும் எந்த உரிமைகளும் இல்லாமல் செய்து முடித்து விட்டார்கள். எனவே தான் முரசொலி மாறன் தலைமையில் திரண்ட தி.மு.க.வின் அதிஉயர் செயற்குழு, இந்திய ஆட்சியில் பங்கு பெறுவது என்று முடிவுகளை எடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்தாண்டுகளாக மத்திய அரசில் அதிகாரமும் செல்வாக்கும் பெற்று, தமிழக மக்களுக்கு எந்த வித நல்லதுகளும் செய்யாமல், தங்களது குடும்ப உறுப்பினர்களை ( கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள் ) அனைவரையும் ஆசியாவின் பெரிய பணக்காரராக மாற்றி விட்டார்கள். எனபது உலகமே அறிந்து கொண்ட விஷயம். கிடக்கட்டும் இவைகள்.

இன்று தமிழகத்தில் எண்ணற்ற அரசியல் கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ம.தி.மு.க. கட்சியின் தலைவர் திரு.வைக்கோ அவர்கள், தான் கொண்ட கொள்கைகளில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். சிறந்த அறிவுக் கூர்மை கொண்டவர். குறிப்பாக தமிழ் இலக்கியம் அறிந்தவர். தமிழர் வரலாறு அறிந்தவர். ஊழல் கறை படியாதவர். தேர்தல் ஒன்றை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசியல் கட்சிகள் ( தலித்துக்களை உள்ளடக்கிய கட்சிகள் உள்பட..) மத்தியில், தேர்தலை புறக்கணித்தவர் வைக்கோ அவர்கள்.

காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் ஊழல் கட்சி என்று அக்மார்க் முத்திரையை பெற்று விட்டார்கள். அதில் அங்கும் வகிக்கும் மு.கருணாநிதி பற்றி ஒன்றும் சொல்ல தேவையில்லை. அவரின் புதல்வியை திகார் சிறைக்கு சென்று வந்தவர். சரத் பவார் என்று தொடக்கி காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அணைத்து கட்சிகளும் பெரும் பெரும் ஊழல்கள் செய்து நாட்டை கொள்ளை அடித்து உள்ளார்கள் என்று மக்கள் சர்டிபிகட் கொடுத்து விட்டார்கள்.

எனவே, இன்று எந்த ஊழல் கறை படியாமலும், மாநிலங்களின் உரிமைகளை பெறுவதிலும் எஞ்சி இருப்பவர் மமதா மற்றும் நிதிஷ் குமார் போன்று பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும் சூழலில், தமிழகத்தில் வைக்கோ அவர்கள் தென்படுகிறார். மமதாவின் தலைமையில் கூட்டணி அமைந்தாலும் அந்த கூட்டணியில் வைக்கோ அவர்கள் மிகப்பெரும் சக்தி மிக்கவராக உருவாகும் சூழல் உள்ளது.

மமதா அவர்களுடன் கூட்டணி வைப்பதின் மூலம் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு ஏற்படும் நெருக்கடியை விட, இந்தியாவில் இடதுசாரிகள் என்று பெரும் மோசடி செய்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் சரிவை சந்திக்க நேரிடும். வரும் காலத்தில் திரு.வைக்கோ அவர்கள் தவிர்க்கவே முடியாத இந்திய அரசியல் சக்தியாக உருவாகும் வாய்ப்பு தென்படுகிறது. இதற்கு அவரின் உறுதியான, மதி நுட்பம் கொண்ட தேசிய அரசியலின், தமிழகத்தின் அரசியலும் கைக்கொடுக்க வேண்டும்.

எனவே, மமதா வைக்கோ சந்திப்பு, இதுகாறும் தமிழகத்தில், இந்தியாவில் ஆட்சி அதிகாரம் பெற்றுக் கொண்டிருந்த மு.கருணாநிதி கட்சியினருக்கு குடும்பத்தினருக்கு வைக்கப்பட்டுள்ள அரசியல் செக் என்றே சொல்லலாம்.

வைக்கோ அவர்கள் இலங்கைப் பிரச்சனையை எடுக்கும் பொழுதெல்லாம், அவரை மிஞ்ச வேண்டிய கட்டாயத்திற்கு தி.மு.க., தள்ளப்படுகிறது.

அ..தி.மு.க., வின் தலைமையோ தூங்கி எழுந்து, தனது நாற்காலிக்கு செல்வதற்கே நேரம் இல்லாத நிலைமையில் உள்ளது.

ஐ.நா.வில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.ஆர்.பாலு தலைமையில் டெசோ தீர்மானங்களை கொடுத்து விட்டு, மறுபுறம் இந்திய அரசுக்கு அதாவது காங் ஐ அரசுக்கு புதிய நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்,கவிழப்போகும் அல்ல சுத்தமாக துடைத்தெறியப்படும் காங் ஐ அரசுக்கு.

இவையெல்லாம் வைக்கோ மற்றும் சீமான் போன்றவர்களின் செயல்பாட்டால் என்றால் யாராவது மறுக்க முடியுமா..?

தமிழகத்தில் சீமானும் இந்தியாவில் வைக்கோ அவர்களும் ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருவாகும் சூழல் உள்ளது. இருவரும் மிக கவனமாக இந்த அரிய நெல்லிக்கனியை பறித்து விடுவார்களா..? அல்லது ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வாய்ப்பை இழப்பார்களா..? என்பதை காலமும் அவர்களின் செயல் திறன் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எழுதியவர் : மாயாண்டிக்கருப்பு (4-Nov-12, 9:53 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே