என்னை பிரிந்த என் தோழிக்கு...

காலை நான்கு மணிக்கு சென்னை தெருக்களில் பித்து பிடித்தவன் போல் நடக்கும் நான் காதலை துளைத்தவன் இல்லை நட்பை துளைத்தவன்...
நீ என்னை உன் மிதியடியாய் இருக்கச் சொன்னால்- உன்னை தாங்குவதில் எனக்கு ஒரு பெருமையும் சுகமும் இருக்கத்தானே செய்கிறது....
தொலை தூரத்தில் நீ இருந்தாலும்..நான் இறந்து கிடந்தாலும், நீ சுவாசிக்கும் காற்றை கூட என்னால் உணர முடியும்..
உன் விடியலின் தேவை என் உயிர் என்றால்- என் உயிரை கையில் வைத்துகொண்டு விடியும் வரை காத்திருபேன் நான்..
நீ மட்டும் என்ன சளைத்தவளோ!
நான் மிதியடியாய் இருந்தாலும்- அதையும் தலையில் தூக்கி வைத்து பெருமை கொள்பவள் நீ மட்டும் தானே..
நீ சுவாசிக்கும் காற்றை நான் உணர்ந்தாலும்- நான் சுவாசிக்கும் காற்றால் நான் இறப்பேன் என்றால் எனக்கு முன்பே சுவாசித்து என்னை காப்பவள் நீ மட்டும் தானே..
என் விடியலின் தேவை உன் உயிர் என்றால்- நான் உறங்கும் முன்பே உயிர் துறப்பவள் நீ மட்டும் தானே...
காதல் பிரிவால் கவிதை எழுதுபவர் பலர் உண்டு!
நட்பின் பிரிவால் என்னை படைப்பாளன் ஆக்கிய பெருமை உனக்கு மட்டுமே உண்டு என் நட்புக்காலமே.......