நட்பு

இது என்ன .. இது என்ன..
உன்னையும் என்னையும் இணைக்கிறதே..
உனக்கும் எனக்கும் பொதுவானதே..
காற்றைப் போல் நம்முடன் உறவாடுதே..
நூல் இழையா இல்லை பொன் இழையா.
இரும்பைப் போல் நெஞ்சில் நிலைத்திடுதே..
விதிமுறை இல்லை, இதற்கு விடுமுறையும் இல்லை..

இது என்ன .. இது என்ன..
ஐயம் வேண்டாம் இதற்கு..
இதம் பரப்ப உதிர்ப்போம் 'இது நட்பே' என்று..

ஆண் பால் பெண் பால் பார்த்தோமா என்ன..
அன்பிற்கு கண்ணில்லை - சொன்னார்கள் !!
நட்பிற்கு கண்ணில்லை -உணர்ந்தோமே !!

இரு துருவத்தில் இருந்தாலும் ஒன்றாவோமே..
பூமி ரேகை சேர்க்கவேண்டாம், நட்பு சேர்த்திடுமே..

நம் கவலை நாம் மறந்திடவே..
புன்னகை மெல்ல அரும்பிடுமே..
வலைத்தளத்தில் நண்பன் பெயர் பார்த்திடவே..

இது என்ன.. இது என்ன..
வார்த்தைகள் எல்லாம் வாழ்த்த ஏங்கிடுதே..
எளிமையுடன் 'என் நண்பன் டா' சொல்லி முடித்திடுதே
இது என்ன.. இது என்ன..

பேசாமல் போனாலும்..
பார்க்காமல் வாழ்ந்தாலும்..
காலம் சதி செய்தாலும்..
நினைவாலே பாலமிடும்..
நலம் அறிய ஆவலிடும்..
நட்பு என்றும் துடித்திடும்..

இது என்ன.. இது என்ன..
இது என்ன.. இது என்ன..

எழுதியவர் : கிரிஜா (6-Nov-12, 9:50 am)
சேர்த்தது : கிரிஜா
Tanglish : natpu
பார்வை : 378

மேலே