ஈமெயில் நண்பன்

ஒவ்வொரு நொடியும்
உன்னை எதிர் பார்த்து
காத்திருந்தேன்
எனது கம்ப்யூட்டர்
திரையில்
நீ வருவாய் என,..
இன்றும் நியாபகம் இருக்கிறது
எனது மொபைல்போன்னில்
காலை நான் கண் விழிப்பதே
உன்னை பார்த்து தான்
என்றாவது ஒரு நாள்
உன் முகம் பார்க்கவில்லை எனில்
அது நான் கல்லறை செல்லும் நாளே ...
எப்படி அதை
நீ இன்று மறந்தாய்..
போகும் போது
எந்தன் விழி வழியே
உன் மெயில் பார்த்த அந்த நிமிடம்
என் வாழ்வின் உன்னத நிமிடங்கள் ..
பிரிவின் வலியை
நீ எழுதிய மெயில்லின் வழியே
என் எண்ணத்தில் ஏற்றியவேனே
என்று நீ வருவாய்
என்னை தேடி ...
இன்றும்
எனது கம்ப்யூட்டர்
திரையில்
உனக்காக காத்து கொண்டிருக்கிறேன் ..
நீ வருவாய் என....
உன்னவளாக........!!!!!!!!!

எழுதியவர் : மைதிலிசோபா (5-Nov-12, 1:49 pm)
பார்வை : 190

மேலே