உன் நினைவுகள்
எத்தனை முறை முயன்றும் முடியவில்லை
உன் நினைவுகளை மறக்க .....
ஒவ்வொரு முறையும் உன் நினைவுகளுடன்
போட்டியிட்டு
என் முடிவுகள் தோற்று போகின்றன ....
நிழல் போல் உன் நினைவுகள்
என்னை தொடருகின்றன
நான் எப்படி இழப்பேன் என் நிழல்களை ..........
நிதானமற்று உன் நினைவுகளுடன்
போராடியதில் ................
நான் நிதானமாய் என்னை இழக்கிறேன் .........

