கற்றுக்கொடு

நலமாய் வாழ கற்றுக்கொடு
நல்லது நினைக்க கற்றுக்கொடு
நன்மையை பகுத்தறிய கற்றுக்கொடு
நன்றி மறவாதிருக்க கற்றுக்கொடு
தீமையை வெறுக்க கற்றுக்கொடு
தவறுகளை கலைய கற்றுக்கொடு
தப்பெண்ணம் கொள்ளாதிருக்க கற்றுக்கொடு
தப்பாத தமிழை கற்றுக்கொடு
துன்பத்திலும் புன்னகைக்க கற்றுக்கொடு
துரோகியை மன்னிக்க கற்றுக்கொடு
தோல்வி கண்டு துவண்டு விடாத நெஞ்சம்கொடு!
துரும்பளவும் பொறமையற்ற இதயம் கொடு
இன்பத்தில் அடக்கமாயிருக்க கற்றுக்கொடு
இயற்கையை ரசிக்க கற்றுக்கொடு
இனிமையாய் பேசிட கற்றுக்கொடு
இதயங்களை வென்றிட கற்றுக்கொடு
நான் என்ற ஒருமை வேண்டாம்
நாம் என்ற பன்மை கற்றுக்கொடு