அவன் ஒரு சைக்கோ.....!
சிகரட்டால் சுட்டான் - தன
சிந்தைக்குள் சுகம் பெற்றான்
சைக்கோ அவன் ஒரு மனித
சைத்தான் மலடன்.....!
பொங்கிய அவள் ஆசையை
பொசுக்கியே ரசித்தான்....
படுத்திருக்கும் போது இனி மீண்டும்
பதமானதோர் சூடு வரும்
பிணமாக அப்போது
பெண்ணவள் மாறியிருப்பாள்
பித்துப் பிடித்த அவன் இனி சுட
பிற ஒருத்தியை தேடியபடி இருப்பான்
எழ முடியாத ஆசைகள் - மனதில்
எழ வைத்த குரோதங்கள்
வாழ்வின் வண்ணங்கள் மாறுகிறது
சிலருக்கு பச்சை பச்சையாக
பலருக்கு சிவப்பு சிவப்பாக
அபாயகரமான மனிதர்கள்......
அச்சப்படாத அசுரர்கள்.......
மறத்துப் போன தேக விரும்பிகள்.....!