தங்கை திருமணம்...

நடுவானை கிழித்து மேடையாக்கி
நட்சத்திரங்களை கோர்த்து மாலையாக்கி
சூரியனை உனக்கு சொந்தமாக்கி
நிலாவை உனக்கு கட்டிலாக்கி
கெட்டிமேளம் கொட்ட ஆசை...
வட்டி கடையில் ஆபரணங்கள்
வேட்டிக்காக துணி துவைப்பவன்
கடன்காரர்கள் தினம் கதவருகில்
காலமெல்லாம் இவை என்னருகில்...
இவைகளை முடித்து விட்டு
இதோ உனக்குத்தான் திருமணம்!!!

எழுதியவர் : charlie (9-Nov-12, 2:32 pm)
பார்வை : 457

மேலே