!!!=((( அடங்காத ஐம்புலன்கள் )))=!!!

கண்ணிரண்டு உள்ளது
கண்டதையும் ரசிக்குது!
கள்ளப்பார்வை பார்க்குது!
கயவனாக மாற்றுது.

செவியிரண்டு உள்ளது
சேதி பல கேட்குது!
புகழ்ச்சி வார்த்தை ஏற்குது!
இகழ்ச்சி வார்த்தை வெறுக்குது.

நாசி ஒன்று உள்ளது
நறுமணத்தை ஏற்குது!
நாற்றத்தை வெறுக்குது!
நற்சுவாசம் இழந்தது.

நா ஒன்று உள்ளது
நரம்பின்றி கிடக்குது!
நஞ்சு வார்த்தை பேசியே
நற்குணத்தை இழந்தது.

உடல் ஒன்று உள்ளது
உடலுறவை தேடுது!
உன்னதமான வாழ்க்கை-இன்று
உயிரற்று போனது....

எழுதியவர் : ராஜ்கமல் (9-Nov-12, 2:31 pm)
பார்வை : 323

மேலே