என் கண்ணன் வருவாள்!

பல பெண்களிடம் தடுக்கி விழுந்தேன்........
நான் யார் என்று அறிந்தேன்!
குழந்தை உணர்வுகள் இருந்த எனக்குள்
பெண்மை உணர்ந்தேன்!
என் கனவுக் கண்ணன் ஒரு பெண் என கண்டேன்!
இயற்கையின் படைப்பில் உண்டோ எனக்கு ஒரு வாழ்க்கை?
அழுகைகள் தந்தன ஆறுதல்!
மாற்றங்கள் தந்தன நம்பிக்கை!
ஒரு நாள் என் கண்ணன் வருவாள்!
அவள் பாதம் நான் பற்றுவேன் கண்ணீருடன்!

எழுதியவர் : தேவி (18-Nov-12, 4:31 pm)
சேர்த்தது : Devy
பார்வை : 141

மேலே