என்னவன்!!!

என்னவன் அவன்
என்னுயிரில் கலந்தவன்
என்னை ஆள்பவன்
என்றும் என்னுடன் இருப்பவன்!
காலங்கள் கடந்தாலும்
கவலைகள் மிகுந்தாலும்
கண்ணீரில் தவழ்ந்தாலும்
கருத்துடன் காப்பவன்!
நிஜமாக நானிருக்க
நிழலாக தொடர்பவன்
நிலையில்லா வாழ்க்கையில்
நிம்மதி தருபவன்!
உள்ளத்திற்கு இதமாக
உண்மைதனை உரைப்பவன்
உரிமையோடு அவன் வந்து
உள்ளன்பில் கலப்பவன்!
அவனின்றி நானில்லை
அவன் உறவின்றி எதுவுமில்லை
அவனியில் கண்டதில்லை
அவனைப்போல் எவருமில்லை!
கவிதையில் கலந்தவன்
கனவினில் மிதந்தவன்
கண்ணுக்குள் எனைவைத்து
கண்மணி போல் காப்பவன்!!!
தேவனாக அவன் வந்து
தேவதையாய் எனை மீட்க
தேடியே வந்தானே
தேகமெல்லாம் சிலிர்க்கிறதே!!!