தூக்கு தண்டனை தேவையா ?

தூக்கு தண்டனை தேவையா ?
கேள்விகள் பாய்கின்றன .
வேண்டும் வேண்டும்
உயிரை எடுத்தவன் உயிரை வாங்கணும் .
மறு பக்கம் ஒரு உயிரை கொல்ல
மனிதா
உனக்கு உரிமையில்லை .
ஏன்,
அது அரசே ஆனாலும் கூட !
சட்டங்கள் புனிதமானவை
ஆகவே
தூக்கு தண்டனை
கொலைகள் நியாயமானவை .
இல்லை இல்லை
உயிரை கொடுத்த கடவுளே
உயிரை பறிக்க முடியும் .
யோசித்து பாருங்கள்,
தண்டனைகளால் திருத்த முடியும்.
உயிரை பறித்தால்
யாருக்கு என்ன லாபம் ,
வஞ்சம் தீர்த்த திருப்தியை தவிர .
ஒரு கொலை
இன்னொரு
கொலையை நியாயபடுத்துமா ?

எழுதியவர் : ராமமூர்த்தி Janakiraman (21-Nov-12, 11:03 am)
பார்வை : 319

மேலே