"பெண்கள் கண்ணியதிற்குரியவர்களா? காட்சிப் பொருளா?
இயற்கைத்தாய் ஈன்றெடுத்த
அகிலத்து ஜீவன்களின்
அற்புத உறவு
அன்னையென்னும் பெண்ணுறவே(...)
அன்பென்னும் வார்த்தைஜாலத்தின்
அர்த்தமுள்ள வர்ணமவள்
ஆண்களின் அதீத
ஆற்றலின் ஆறுதலவளே(...)
தாயென்னும் அவதாரத்திலும்
தாரமென்னும் ரூபத்திலும்
கயவனையும் கண்ணிமைபோல்
காக்கும் கடவுளவளே (..)
ஆதவனிடம் அருள்பெறும்
நிலவே பெண்ணவள்
பகலவனை கண்டுநாணும்
பனித்துளியே பெண்மை (...)
துதிப்பவரையும் மிதிப்பவரையும்
தாங்கிநிற்கும் தரணித்தாயவள்
பூஜைக்கும் அர்ச்சனைக்கும்
பூவென்று அவதரித்தவள் (...)
கயவனே காமுகனே
பெண்மையது நீ
கட்டிக்காத்து போற்றிடும்
கர்ப்பைப்பெற்ற பொக்கிஷம்(...)
கள்ளத்தனமாய் ரசித்துருசிக்க
கன்னியர்கள் காட்சிப்பொருளில்லை
கண்ணியமாய் காப்பற்றவேண்டிய
கண்ணியத்திற்குரியவர்கள் (...)