சுயசமாதானம்

நீ நிரந்தரம் துணைக்கு என்ற எண்ணத்தில்,
நான் துவங்கிய பயணம் ஒரு கட்டத்தில்,
நீ பிரிந்தபோது நிலையற்ற ஒரு தோற்றம்தந்தது !
உடைந்து யோசித்தேன்,
உன்னுடனேயே இருந்தாலும் ஒரு நாள்,
மண்ணுலகை பிரியத்தானே வேண்டிவரும் !!
அன்று என்ன பதிலிருக்கும் என்னிடம்,
"எனை ஏமாற்றிப் போய்விட்டாயே" எனும் கதறலுக்கு!!
எனவே,
நினைத்துக்கொள்கிறேன் எனை நீ,
தப்பவைத்திருக்கிறாய் தர்மசங்கடத்துக்கு ஆளாக்காமல் என்று............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (22-Nov-12, 8:03 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 120

மேலே