மொத்தமும் உனக்கே!!
என்மனம் தொடுக்கும்
ஒவ்வொரு கேள்விக்குறியிலும்
முற்றுப்புள்ளியாய்
அவள் புன்னகை...
முத்தம் கேட்டேன்
முடியாதென்றாள்....
எல்லை தாண்டவா என்றேன்
ஊராருக்கு எல்லை
உனக்காய் இல்லையென்றாள்...
தொட்டுக்கொள்ள தயங்கிநிற்க
மொத்தமும் உனக்கே
அனுமதியெதற்கு என்கிறாள்...

