..................அழகிய தேவதை .............................

நீரில் பூக்கும் தாமரை எல்லாம்
அவள் இதழில் பூத்து இருப்பதை கண்டேன்
நீரில் வாழும் மீன்கள் எல்லாம்
அவள் விழிகளில் துள்ளி குதிப்பதை கண்டேன்
இரவை அழங்கரிக்கும் விண்மீன்கள் போல
அவள் இதழை அழங்கரிக்கும் அவளின் புன்னகை


அவள் சூரியனை சட்று நேரம் பார்த்தாள்
சூரியனுக்கும் கண்கள் கூசுமோ
என்று நினைத்து பார்த்தேன்
அவள் பூக்களை கண்டு சிறு புன்னகை
தூவி விட்டால் பூக்க இருக்கும் பூக்கள்
கூட சட்று நேரம் கழித்துதான் பூத்து விடும்
பூத்து இருக்கும் பூக்கள் கூட உதிர்ந்து விடு
அவள் புன்னகை அழகை கண்டு

ஒவ்வரு நாளும் விலை ஏறும் தங்கம் போல்
ஒவ்வரு நொடியும் அவள் அழகு கூடுகிறது
அவள் அழகுக்கு என்ன விலை என்று சொன்னால்
என் உயிரை அடமானம் வைத்தாவது
வாங்க ஏங்குகிறேன் சொல்லாமலே
என்னை கொன்று குவிக்கிறாள்

என் வாழ்வில் இன்னவரை இவளை போல
ஒரு பெண்ணை பார்த்தது இல்லை
அவள் பார்வை என் மேல் தீண்டிய போது
தண்ணீர் பட்டு சாயம் போகும் துணியை போல
அவள் பார்வை பட்டு என் கருவிழிகள் நிறம்
இழந்து போனதே

எழுதியவர் : பனித்துளி வினோத் (24-Nov-12, 3:33 pm)
Tanglish : alakiya thevathai
பார்வை : 1178

மேலே