மறைந்த உண்மைகள்

இலங்கை போர்க்குற்றம்: ஐநா அறிக்கையின் மறைக்கப்பட்ட பகுதிகள்!


இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் ஐநா அவை கடமை தவறியதன் மூலம் 70,000 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலைக்கு துணை போனது தொடர்பான சார்லஸ் பெட்ரி குழுவின் அறிக்கையை ஐநா அவை பகிரங்கமாக வெளியிட்டது. ஆனாலும் அதன் சில பகுதிகள் கருப்பு மையினால் மறைக்கப்பட்டுள்ளன.
சார்லஸ் பெட்ரி அறிக்கை அளிக்கிறார்
இதுகுறித்த கேள்விக்கு, ஐநா அவையின் இரகசிய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஐநா ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பகுதிகளை ஐநா பொதுச் செயலர் பான்கி மூன் கருப்பு மையினால் மறைத்துவிட்டதாக ஐநா செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதாவது, சார்லஸ் பெட்ரி குழு அளித்த அறிக்கையின் பகுதிகள் பான்கி மூன் அவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. (ஐ.நா அறிக்கை இங்கே காண்க)

மறைக்கப்பட்டவை எவை?

சார்லஸ் பெட்ரி குழு அறிக்கை இப்போது உள்ள வடிவிலேயே ஐக்கிய நாடுகள் அவையையும் இலங்கை அரசையும் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டும் வகையில்தான் உள்ளது. அதிலிருந்து இன்னும் தீவிரமான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கம்

128 பக்க அறிக்கையில் முதன்மை அறிக்கையானது 32 பக்கங்களில் அமைந்திள்ளது. இத்தகைய சிறிய அறிக்கைக்கு "அறிக்கையின் சுருக்கம்" தேவையில்லை என்பதற்காக மூன்று பக்க அறிக்கை சுருக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. ஆனால், முழு அறிக்கையின் தாக்கத்தையும் உணரும் வகையில் முதல் மூன்று பக்க அறிக்கை சுருக்கம் இருந்ததாலேயே அது நீக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். (நீக்கப்பட்ட அந்த அறிக்கைச் சுருக்கத்தை கடைசியில் கீழே காணலாம்.)

விஜய் நம்பியார், பான்கி மூன் மீது நேரடி குற்றச்சாட்டுகள்!

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டப் போது அதனை தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், போர்க்குற்றத்திற்கு துணை போனவர்கள் பட்டியலில் பான்கி மூனின் பிரதிநிதி விஜய் நம்பியார், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஜான் ஹோம்ஸ், பான்கி மூன் ஆகிய மூன்று பேரும் இடம்பெருகிறார்கள்.
ஜான் ஹோம்சுடன் நான் (2009 கோபன்ஹெகன், டென்மார்க்)
இலங்கை ராணுவம் அப்பாவி பொதுமக்களை கொலை செய்தது தொடர்பான புள்ளி விவரங்களை மறைத்ததுடன் - இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்துள்ளது என்கிற தகவலை கூறக்கூடாது என்று ஜான் ஹோம்ஸ் வாதாடிய செய்தி கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.

ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியார். (அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார்.) கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
விஜய நம்பியார்
விஜய் நம்பியாரை நேரடியாகக் குற்றம் சாட்டும் பகுதிகளை இந்த அறிக்கையில் இருந்து பான்கி மூன் நீக்கியுள்ளார்.

அவ்வாறே, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்கிற விவாதத்தின் போது "இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று பான்கி மூன் அவர்களே வாதாடியுள்ளார்.
ராஜபட்சவுடன் பான்கி மூன்
இப்படிப்பட்ட நேரடியான குற்றச்சாட்டுகளை, அந்த அறிக்கையில் இருந்து கருப்பு மை வைத்து பான்கி மூன் அழித்துள்ளார். இதைத்தான் "ஐநா அவையின் இரகசிய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஐநா ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பகுதிகளை ஐநா பொதுச் செயலர் பான்கி மூன் நீக்கிவிட்டதாக" ஐநா செய்தித்தொடர்பாளர் குறிப்பிடுகிறார்.

ஐநா அறிக்கையில் கருப்பு மையினால் அழிக்கப்பட்ட சில பகுதிகளும் அதன் உண்மை பகுதியும் இதோ!

எழுதியவர் : (26-Nov-12, 5:43 am)
சேர்த்தது : tamilnadu108
பார்வை : 155

மேலே