நடு நிசி நட்சத்திரங்கள்(குறுங்கவிதைகள்2)

நடு நிசி
சுவர் கோழி
சீடி அடித்தன ஓயாமல் ...

தங்கம் இறைந்து
கிடந்தது
முற்றத்து வானில் ...

சிரித்தன
சல சல வென
மரங்கள் ...

தூங்கி வழிந்தது
காற்றில் ஆடி ஆடி
தென்னைகள் முற்றத்தில் ...

தமுக்கு ஓசை
நெடுந்தொலைவில்
காது கிழிய ...

அம்மனுக்கு
படையல்
ஊர் எல்லையில் ....

பச்சைக்காளி
தித்திப் பல்லும்
பளிங்கு விழியும் ...

கருப்பாக ஓட்டின் மேலே
மர நாயா ?
பூனையா ?

சிரிப்பானது
இரவு
தேவதைக்கு ....

எழுதியவர் : செயா ரெத்தினம் (26-Nov-12, 3:34 am)
பார்வை : 121

சிறந்த கவிதைகள்

மேலே