மொபைல் ( முட்டாள் ) காதல்

பத்து எண்ணில் பாசத்தை
அனுபவிக்க நினைத்து
மலர்ந்தது தான் இந்த
மொபைல் காதல்
முகம் தெரியா உன்னை
குயிலென்று நம்பி
குணம் தெரியா உன்னை
மயிலென்று நம்பி
பார் போற்ற வாழ வைக்க
பல காலம் தவமிருந்து
உன்னை பார்க்கும் நாளை
அதிஷ்டமாக நினைத்து
பார் கூடி தேரில் வலம் வந்து
உன்னை கை பிடிக்க நான் கண்ட
கனவுகளோ ஏராளம்
அந்நாள் தான் எனக்கு
பொன்நாள் என்று
என்னை எங்க வைத்த உன்னை
நம்பி கெட்டேன் நானடி
வெளியில் சொல்ல வெட்கபட்டு
வேகுதடி என் நெஞ்சு
பேயும் இரக்கம் கொள்ளும்
உன்னிரக்கம் எங்கே போனதடி
உன்னை எண்ணி உனக்காக நானும்
என்னை எண்ணி எனக்காக நீயும்
காதலித்தது பொய்யென்றால்
நிச்சயம் காதல் பொய்யில்லை
என் காதலும் பொய்யுமில்லை
ஆனால் முட்டாள் தனமானது
உனக்காக நான் செலவு செய்த
என் உழைப்பின் மூலதனம்