சிரித்துக் கொண்டே போராடலாமே !!!

தெரியவில்லை எனக்கு!!
வாழ்க்கை வேரின் ஈரம்
எங்கு இருக்கிறது என்று ??
போராடிக்கொண்டு தான்
இருக்கிறோம் வாழ்வதற்காக!!
ஒவ்வொருவரின்
தேவைகள் வேறுதான்..
ஆனால் வெற்றி என்ற
இலக்கு ஒன்று தான்..
போராட்டம் என்ற உளியால்
மட்டுமே நம்மை
சிலையாக்க முடியும்
என்ற உண்மை
பலருக்கு தெரியாத ஒன்று!!
சிரிக்கும் மனிதர்களை விட
விரக்தியில் வெந்துக்கொண்டு
இருபவர்கள் தான் அதிகம்..
நண்பனே!!
போராடிதான் ஆக வேண்டும்
அதை சிரித்து கொண்டே செய்யலாமே
களைப்பு தெரியாது அதற்காக !!

எழுதியவர் : தேவிப்ரியா சுந்தரம் (2-Dec-12, 11:11 pm)
பார்வை : 183

மேலே