!%! கை கோர்ப்போம் மீனவனை காக்க !%!
எல்லைகள் இல்லாமல் பறந்து விரிந்த கடலில்,
"எனது நாட்டின் எல்லை" என்று கூறி,
கொல்லப்படும் மீனவர்கள் எத்தனை பேர்...!
இலங்கையில் அகதிகளாய் இறக்கும் மக்களை விட,
இங்கே அதிக இறப்புகள் கடலில் இரக்கமின்றி,..!
மீனவர்களின் கண்ணீர் துளிகள் யாருக்கும் தெரிவதில்லை,
கடல் நீரில் கலப்பதால்,
புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் கண்ணீர் துளிகள்,
கலப்பதால் தான் உப்பாய் இருக்கிறது கடல் நீர்...!
தமிழ் மீனவன் இறக்கிறான் என்று,
மௌனமாய் இருக்கும் மனிதர்களே,
தமிழனாய் இருந்தாலும் ,,
அவன் "இந்தியன்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!
தீபாவளி துப்பாக்கி போல இங்கே.
எத்தனை வெடிக்கிறது மீனவர்கள் மேலே,...!
இந்தியா விளையாட்டுக்களில்,
வீழ்ச்சி அடைந்தால் கூட ஆத்திரம் அடைகிறோம்,
ஆனால் இங்கே "இந்தியர்களே வீழ்த்தப்படுகின்றனர்"
மௌனம் காப்பது ஏன்...!
இதயத்தோடு கடலுக்கு சென்ற இடத்தில்,
இரையாக்கப்பட்டது எத்தனை பேர்...!
அரசியல் கட்சிகள் இதற்காக,
எத்தனை பொய் மாநாடுகள் நடத்தினர்,
ஆறுதல் ஓட்டுகள் பெறுவதற்கு...!
ஆனால் ஒரு தொகுதி இருக்கிறதா மீனவர்களுக்கு...!
நான் கொண்டதில்லை அவர்களின் வலிகளை,
ஆனால் கண்டேன் சிறு காகிதத்தின் ஒரு மூலையில்,
தமிழ் நாளிதழின் எத்தனை பக்கங்கள்,,,
கவர்ச்சி நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும்,
ஆனால் நான்கு வரிகள் மட்டுமே
என் மீனவனின் கண்ணீர் துளிகளை சொல்வதற்கு....!!
இராணுவத்தில் சென்று உயிர் இழந்தவர்களின்,
பட்டியலை விட நீளமாக செல்கிறது,
கடலுக்கு சென்று உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை....
அவர்களை எதிர்த்து போரிட சொல்லவில்லை...
ஆனால் மௌனம் காத்து தொலைத்து விடாதீர்கள்,
"தமிழர்களின் பெருமைகளை சவகுழியினில்"
என் கண்களில் கண்ணீர் சிந்த எழுதுகிறேன் காகிதத்தில்,
"என் உடன் பிறவா சகோதரர்களுக்காக"....!!!!!