இன்று பறிபோனது (குறுங் கவிதைகள் )

காவிரியை
கண்ணகியாக்கியது
கர்நாடகம் !

அகத்தியன்
கைசாடி மட்டும்
நிரம்பி வழிகிறது !

கல்லெல்லாம்
சிலையானது
தூரிகையாலே !

கண்ணீர் சிந்துகிறது
குகை ஓவியங்கள்
சிற்றன்னவாசலில் !

பனியில் நனைந்த
பன்னீர் பூக்கள்
கண்ணீரானது !

சிற்பியினால்
சிலையானது
களிமண் !

குமுதம் விகடன்
கணினிக்குள்ளே
இன்றைய அம்மா !

எழுதியவர் : செயா ரெத்தினம் (3-Dec-12, 3:21 am)
பார்வை : 170

மேலே