சங்கரன் அய்யாவின் பதிவு ...அர்த்தம் தெரிந்து கொள்ள அவசியம் படிங்க...இன்போ.அம்பிகா
சங்கரன் அய்யாவின் பதிவு ...அர்த்தம் தெரிந்து கொள்ள அவசியம் படிங்க...இன்போ.அம்பிகா
***************************************************************************
தள கவிநண்பர் முதல் பூ அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ---இவற்றை விவரியுங்கள் என்று ஒரு
கேள்வி-பதில் பகுதியில் கேட்டிருந்தார்.இங்கே
உங்கள் எல்லோருக்காகவும்....
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ---பழைய காலங்களிலும் கவிதைகளிலும் பெண்களுக்கான குணங்கள் அல்லது உணர்வுப் பூர்வமான அழகுகள் என்று சொல்லப்பட்டவை.
அச்சம் நாணம் இரண்டிற்கும் பொருள் விளக்கம் தேவை இல்லை
எல்லோரும் அறிவார்கள். மடம்--மடமை அல்லது
அறியாமை. சில சூழ் நிலைகளில் தெரிந்ததையும்
தெரியாததுபோல் பாவனை செய்வார்கள் பெண்கள். இது மடம். இது ஒரு பாவனை. இது அகப் பொருள் இலக்கியம் சார்ந்த பாவனை குணம்.சான்றாக காமத்தைப் பற்றி ஆண்
பேசினால் அது தெரிந்திருந்தும் தெரியாததுபோல் தன் அறியாமையை வெளிபடுத்துவாள்.இந்த பாவனை பெண்மையின் மெல்லியல்பாக பழைய தமிழ் சமுதாயத்தில் எதிர்பார்க்கப் பட்டது. அதற்காக பெண்கள் அறிவிலியாக
இருக்க வேண்டும் என்று பழைய சமுதாயம் சொல்லவில்லை.
இப்பொழுது பெண்களே டாக்டர்கள்.பெண் டாக்டர்கள் காமம் அல்லது செக்ஸ் பற்றிய கேள்விக்கு வெட்கப் படமுடியுமா ?
பயிர்ப்பு ----அருவருப்பு என்று பொருள் படும் அவைக்கு உதவாத சொற்களை அல்லது பெண்கள் முன் சொல்லக் கூடாத சொற்களை கேட்கும்போது ஏற்படும் அருவருப்பு.
பிற ஆடவன் தொடும்போது கற்பினால் ஏற்படும் அருவருப்பு.
தற்காலத்தில் பெண்கள் போலீசிலும் ராணுவத்திலும் பணிபுரிகிறார்கள். தவறு செய்யும் ஆடவனை தொட்டு தட்டிக் கேட்காமல் இருக்க முடியுமா ?
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்....என்று பாரதி எழுதிப் போந்தபின் அச்சம் மடம் பயிர்ப்பு பெண்களுக்கு தேவையற்றது. காலத்திற்கு பொருந்தாது. நாணம் எல்லா பெண்களிடமும் இயல்பாய் பொருந்தி நிற்கும் குணம்.
பெண்ணில் நாணம் வரையும் சித்திரத்தில் பெண் இன்னும் அழகு பெறுகிறாள்.இது கவிஞன் கண்ட உண்மை.
பூவுக்கு வாசம் போல்
பெண்ணுக்கு நாணம்
நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
----பழைய பாடல்
நாணமோ இன்னும் நாணமோ
கண்கள் போடும் நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ...நாணமோ ...
----வாலியின் அழகிய பாடல் வரிகள்
----கவின் சாரலன்