காதலிக்க போகிறேன்
என் வயது ஐப்பது
அரைசதம் என்பது
எனக்கு தெரியும்
ஆனாலும் நான் கற்பனைவாதி
ஆதலால்
காதல் செய்ய விரும்புகின்றேய்ன்
இருபத்து ஆறு வருடமாய்
மனைவியை
காதலித்து காதலித்து
மனம் மரத்து போய் விட்டது
மாற்றம் தேவை
உள்ளத்துக்கு
உடலுக்கு அல்ல
நல்ல தோழி வேண்டும்
நான் சொல்வதை புரிதல் வேண்டும்
வீட்டு கணக்கு பார்க்க அல்ல
விடை தெரியா என் சந்தேகத்தினை
தீர்த்துவைக்க
அம்பதிலும் ஆசை வரும் என்ற
அற்ப சுகம் வேண்டாம்
ஐம்பதிலும் அறிவு வேணும்
என்ற என் ஆதங்கம்
போக்க வேண்டும்
என் கவிதை வரியில்
அவள் கைபட வேண்டும்
என் கருத்து தோட்டத்தில்
கனி பறிக்க வேண்டும்
நானும் காதலிப்பேன்
நாலுபேரை போல அல்ல
நல்லவிதமாய்

