அம்மா! என் அருகில் நீ வேண்டும்.
வீட்டிலே தங்காத
அப்பா!l
வேலைக்குப் போகும்
அம்மா!
விளையாட்டுப்பருவம்
தொலைத்த
பிள்ளைகள்!
பெற்றெடுக்க தாய்!
வளர்த்தெடுக்க
தாத்தா பாட்டி
வரம் பெற்ற
பிள்ளைகள்!
வேலையாட்கள்
சாபம் பெற்ற
பிள்ளைகள்!
பெற்றோரைத் தவிர
மற்றோர்
அனைவரின்
அரவணைப்பிலும்
(அடைப்பிலும்)
பிள்ளைகள்
கொடுமை!
நம்மை வளர்த்த
பெற்றோரே
தள்ளாத
வயதில்
நம் பிள்ளை
வளர்ப்பது
பெரும் பாவம்!
தாய் பால்
கொடுப்பதில்லை
புட்டிப்பால்
கொடுக்கவும்
தாய் அருகில் இல்லை
பரிதாபம்!
பிறந்தவுடன்
பால்குடி மறந்தவுடன்
பச்சிளம் பிள்ளைகள்
படியேறுவதோ
பள்ளிக்கூடம்!
பலமணி நேர
பிரிவு
நிவர்த்தி செய்ய
அநியாய
செலவு!
கூட இருக்க
நேரம் இல்லாததால்
குறைகள்
களையப்படாததால்
ஒழுக்கம்
போதிக்கப்படாமல்
அலாதி செல்லம்
அவஸ்த்தை மிச்சம்!
உடல் வருத்தி
உயிர் வருத்தி
சம்பாத்தித்த
பணமெல்லாம்
'சரிகட்டல்"
என்ற பெயரில்
வீண் விரயம்!
உணர்வுகளை
புரியாமல்
உறவுகளில்
விரிசல்!
குடும்பச் சிதைவு
மன வேதனை!