மரித்துப் பார்க்கிறேன் மரணம் வர மறுக்கிறது.

கனவுகளை சுமந்தபடி
காரியம் வெல்ல புறப்படுகிறேன்
என் கால்களே
என்னை இடரி விடுகின்றன.!


தானே எழுந்தேன் வேகத்தோடு
தடுமாறித் தள்ளாடுகிறேன்-தாங்கும்
என் கைகளே
என்னை தள்ளி விடுகின்றன..!

ஏங்கும் ஏக்கத்தோடு
எப்படியும் வெல்ல எண்ணுகிறேன்
என் எண்ணங்களே
என்னை கொன்று போடுகின்றன..!

திட்டமிட்டே தினமும்
திடமாகத் திமிறுகிறேன்
என் தடங்களே
என்னை தடை செய்கின்றன..!

முட்டி மோதி முயற்சியில்
முளைக்கிறேன் முன்னேறுகிறேன்
என் முகவரியே
என்னை மூழ்கடிக்கின்றன..!

இறுதி வேண்டாமென்று
உறுதி கொள்கிறேன் உளறுகிறேன்
என் உணர்வுகளே
என்னை உருக்குழைக்கின்றன..!

மீண்டு, மீண்டும் தொடர
மரித்துப் பார்க்கிறேன்
என் மரணமும்
என்னைச் சேர மறுக்கிறதே..!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (4-Dec-12, 7:55 am)
பார்வை : 177

மேலே