மூன்று எழுத்து

வாழ்க்கை முழுவதும் நம்மை துரத்துகின்றன மூன்று எழுத்துக்கள்
பிறக்கும் போது ஆரம்பிக்கும் மூன்று எழுத்து -அம்மா
முதல் ஆசிரியராய் வரும் மூன்று எழுத்து -அப்பா
உலகத்தை உணர வைக்கும் மூன்று எழுத்து -நட்பு
வேறொரு உலகத்தில் வாழவைக்கும் மூன்று எழுத்து -காதல்
தள்ளாடும் வயது வரை வரும் எழுத்து -மனைவி
இறந்த பின்னும் நம்மை தேடி வரும் மூன்று எழுத்து -உறவு
காடு வரை வந்து கொள்ளி இடும் மூன்று எழுத்து -மகன்
இது எதுவும் வேண்டாம் என்று சொல்லும் மூன்று எழுத்து -துறவு
இது எல்லாம் கிடைக்க நீ செலுத்த வேண்டிய மூன்று எழுத்து -அன்பு

எழுதியவர் : selvi (9-Dec-12, 10:15 pm)
Tanglish : moondru eluthu
பார்வை : 745

மேலே