டிசம்பர் 10
இன்று உலக மனிதஉரிமைகள் தினம்
ஓவ்வொருவரும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிடவேண்டும் என்பதனை வலியுறுத்தும்விதமாக ஓவ்வொரு ஆண்டும் டிச.10-ம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1948-ம் ஆண்டுடிசம்பர் 10-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில், உலக மனித உரிமைகள்தினம் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைபடுத்துவித்தில் 1950-ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
உலகில்வாழும் அனைவரும் சமம். ஓருவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை நாமும் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். யாரையும் அடிமைப்படுத்தக்கூடாது.எதுமனித உரிமை :ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான மனித உரிமை வந்துவிடுகின்றன. உயிர்வாழ்வதற்கானஉரிமை, கருத்துசுதந்திரம், கல்வி,மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம்.
தொடரும் மீறல்கள்:இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் 1991-ம் ஆண்டு அக்.13-ல்இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உலக நாடுகளிலும்,இந்தியாவிலும் அடிமைத்தனம், இனவெறி,பாலியல் குற்றங்கள் என மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.இதைமுற்றிலும் தடுப்பதற்கு அரசுடன் இணைந்து மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவிக்கிறது.