சுமையே சுகமாய்.......
முதுகில் சுமந்ததெல்லாம்
மூளையில் சுமந்துகொண்டு
எழுதுகோல் வழியே
காகிதத்தில் கொட்டிவிட்டு
இவ்வாண்டு படிப்பெல்லாம்
இத்துடன் முடிந்ததென்று
சிட்டாய் பறந்திடுவர்
சிறுவர்கள்..... விடலையர்....
இவர்கள்
சிட்டாய்ப் பறந்தாலும்
நாற்பது நாட்களிலே
புதிய சுமை சேர்ந்துவிட
தொடர் கதையாய் சுமத்தலுமே
இறுதி படிப்பு முடியும் வரை...
படிப்புச் சுமை இறங்கிவிட
குடும்பச் சுமை ஏறிவிடும்
ஆயுள்வரை இறக்கம் இல்லை
இறக்கும் வரை
சுமை ஓய்வதில்லை....
சுமைதனையே
சுமக்க பழகிவிட்டால்....
சுகமென கொண்டுவிட்டால்..
பாரம் தெரிவதில்லை
உள்ளம் சோர்வதில்லை...
பழகி விடு சுமப்பதற்கு
விலகிவிடும் துன்பமெல்லாம்...