சாதிச் சேறு
சாதிச் சேறு
(கவிதை)
இடிக்கின்ற வேகத்தில் இப்புவிதனையே
இரண்டாய்ப் பிளக்கும்
அக்கினி இடி நீ..!!
வெடிக்கின்ற வேகத்தில் அவ்வான் வெளியையே
விலக்கிப் பார்க்கும்
வெந்தழல் பந்து நீ…!!
நடக்கும் வேகத்தில் நானிலந்தனையே
நகர்த்திப் பார்க்கும்
நெருப்புப்பொறி நீ…!!
கடக்கும் வேகத்தில் கடல்கோள்தனையே
கையகப் படுத்தும்
கனலின் கரு நீ..!!
இருந்தும் மேனியில் சாதிச்சேறுதனை
விரும்பிப் பூசியதேன் விந்தை மனிதா!
திரும்பிப் பார்நீ அனைவருமங்கே
ஒருதாய் மரத்தின் பல கிளைகள்!