பாரதியின் பிறந்த நாள்.. கவி நாயகன் மலர்ந்த நாள்...
பாரதியின் பிறந்த நாள்
கவி நாயகன் மலர்ந்த நாள்
பார் போற்றும்
"ரதிபோன்ற" கவியை படைத்த
பா"ரதி"யின் பிறந்தநாள்...
பல வண்ண கவிகள்
படைக்க தீ போன்று இந்த பாரினில்
பாதம் பதித்த பாரதீயின்
முதல் நாள்
ஜாதி கொடுமையை கண்டு
கடுமையான கோபம் கொண்டு
மனபாரம் அடைந்த
"பார"தியின் பிறந்த நாள்
பாரத தாயின்
மூத்த மகன் பிறந்த நாள்...
பராசக்தியை நினைத்து
"எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று
பரவசத்தில் பாடிக் களித்த
பண்புடையோனின் பிறந்த நாள்...
ஆணும், பெண்ணும் சரி சமம் என்று
ஆணிதனமாய், ஆவேசமாய் கூறிய
ஆண் மகனின் பிறந்த நாள்..
தமிழை காதலித்து
அதனுள் கரைந்து உருகி பாடிய
இவன் கவிகளை
இப்போது தமிழ் மொழி காதலிக்கிறது,
தரணியெங்கும் அவன் பெயர் சொல்கிறது..
இவன் கவிகளை படித்து
இன்பமுற்று இன்னிசை மழையில்
நனைந்தோர் பலர்...
காலம் இவனை கடத்தி சென்றாலும்
இவ்வுலகம் உள்ள வரை
என்றும் அழியாது இவன் கவிகள்...
முறுக்கு மீசை முண்டாசுகரானின்..
சில வரிகள் இதோ...
இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமை
யுடைத்து; காற்றும் இனிது
தீ இனிது, நீர் இனிது , நிலம் இனிது
ஞாயிறு நன்று; திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது, மலை இனிது, காடு நன்று,
ஆறுகள் இனியன,
உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் காயும் கனியும் இனியன
பறவைகள் இனியன, ஊர்வனவும் நல்லன
நீர் வாழ்வனவும் நல்லன
மனிதர் மிகவும் இனியர்
ஆண் நன்று, பெண் இனிது
குழந்தை இன்பம்
இளமை இனிது, முதுமை நன்று
உயிர் நன்று-சாதல் நன்று
அனைத்தும் நன்று என்று பாடிய
கவிஞனின் உள்ளமும் மிக நன்றே......
-PRIYA