பாரதி

பாரதி பிறந்தார்
பராதாம் போற்றிட
பா பல தந்தார்
பா ரதம் தனில்
பாலகர் தான்
ஏறிட
எட்டயபுரம் ஒளிர்ந்தது -அவர்
எழுத்து கோல் மிளிர்ந்தது
எடுத்து வைத்த
எட்டுக்கள் யாவும்
சுதந்திரத்தை சுவாசித்தன
பாரத தாயின்
திராவிடன் மகன்
விழித்தெழ
விதி செய்தார்
விசும்பு தொட்டு
விரிந்த உலகம் வரை
விரிந்த அவர் புகழ்
விடிந்து மடியும்
விடியல்களால் நினைவு கூறப்பட
என் கவி சமர்ப்பணம்
-நிலைக்கட்டும் அவர் புகழ் -