காகிதம்...

எதார்த்தமாக வாழ முயன்றேன்
முயல்கிறேன்
அதனால் தானோ என்னவோ
ஆயிரம் கிறுக்கல்களை சுமக்கிறேன்...
பிறப்பில் பெருமை கொண்டேன்...
அவனைக் கொன்றுதான்
நான் பிறந்தேன்...
ஒன்றை இழந்துதான்
ஒன்றை பெறமுடியும்
என்பதற்கு சான்றாக...
உலகம் சுற்றும் வாலிபன் நான்
பலர் எண்ணங்களை சுமக்கின்றேன்...
வலியோடு வாழலாம் –ஆனால்,
வழிஇன்றி மட்டும் வாழாதே!
என்னிடம் கற்றுக்கொள்...

எழுதியவர் : anithbala (13-Dec-12, 9:27 pm)
Tanglish : kaakitham
பார்வை : 131

மேலே