அறையும் அம்பலமும்
தெருமுனைச் சந்து ஓரம்
கடும் போக்குவரத்து
பறக்கும் புழுதிப் படலங்கள்
காது செவிபடும் ஓசைகள்
மாமனார் பற்றி மாமியார் பற்றி
நாத்தனார் பற்றி கொழுந்தன் பற்றி
கொழுநன் பற்றிய விமர்சனம்
எதிர்த் திசையில் அதே ஆலாபனை
அறைக்குள் விவாதிக்க வேண்டியனவெல்லாம்
அம்பலத்தில் புழுதிப் படலத்தில்
தவிடு போடியாகின்றன
சுற்றுச் சூழல் மாசுபோல் .....

