தண்டனைக் காலமிது

தண்டனைக் காலமிது
தண்டனைக்கான
கால நிர்ணயம் இன்னும்
கணக்கில் கொள்ளப்படவில்லை.!!!

கணக்கனை
அழைத்து வரப் போன
காவலன்
காலன் வரும் வரை
வரப் போவதில்லை..!!!

ஆம்..!
குற்றம் என்னவென்று
குருட்டுத் தனமாய் கேளாதீர்
அது கூட குற்றமாகும்..!!!

அப்படியென்றால்....
தண்டனை எதுவென்று கேட்பீர்..!!!

கேளும்.! கேளும்.!!

வாழ நினைத்தால்
வாழ்வே தண்டனையாய்...

சாக நினைத்தால்
சாவே தண்டனையாய்...

மறக்க நினைத்தால்
மறதியே தண்டனையாய்....

எல்லாமும்
தண்டனையாய் போக
அதற்கும் ஒரு தண்டனையாய்
இந்த வரிகள்.!!!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (16-Dec-12, 8:25 am)
பார்வை : 141

மேலே