எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு-44
தோழமைகளே...
எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்புகள் வரிசையில் 44 -ஆவது படைப்பு...
தோழர்கள் எவரும் பரிந்துரை செய்யலாம்..... இப்படித்தான் நாம் நமது பரிந்துரைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவா..
. வாசித்து தோழர் ஆண்டனிக்கு வாழ்த்துகள் கூறலாம்..
முத்தமிட்டுக் கொண்டாடுங்கள் வாழ்வை... (பாகம் 1)
முத்தம் கேட்டேன்
சரி என்றாய்
ஒரு பட்டாம் பூச்சி
சிறகு மடிப்பது போல்
இமை மூடினாய்
நான்
முத்தம் மறந்து
முகம் பார்த்துக் கொண்டிருந்தேன்....
*************************************
இன்றைக்கான
முத்தத்தை
எண்ணிக்கையில் சொன்னாய்
எழுதப்படிக்கத் தெரியாதவன்
எண்ணத் தெரியாமலே
கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன்
************************************
உதடும்
உதடு சார்ந்ததும்
முத்தத் திணை.....
********************
குளித்துவிட்டு
ஈரமாய் வந்தாய்
இறுக்கி அணைத்து
முத்தமிட்டேன்
மொத்த ஈரமும் ஆவியாகி
அன்றே
மழையாய் பெய்தது.......
************************