உனக்காக (நியூ)

நேற்றுவரை காத்திருந்தேன்
இன்றும் காத்திருக்கிறேன்
நாளையும் உன்னை நோக்கியே காத்திருப்பேன் !

தன்னபிக்கையை இறுக பிடித்துகொண்டேன்
உழைப்பை உரமாக்குகிறேன்
வாய்ப்புகளை வாழ்க்கையாய் பார்கிறேன்
முயற்சிகளையே மூச்சாய் சுவாசிக்கிறேன் உனக்காக !

அலட்சியம் எதிலும் இல்லை
லட்சியமே வாழ்வின் எல்லை
சாதிக்க சலித்தது இல்லை !

என் கனவுகளை நிஜமாக்குபவலும்
என் கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பவளும்
என் எதிகால வாழ்க்கையும் நீயாகவே ஆகிவிட்டாய் பெண்ணே !

உறக்கம் கலைந்தேன்
பசியை மறந்தேன்
லட்சியமே உன்னை நோக்கி
கடிவாளம் இட்ட குதிரையாய் பயணிக்கிறேன் !

உன்னை அடைவதர்க்குதான் எத்தனை போராட்டம்
ஒட்டு மொத்த உலகமே உன்னை மட்டுமே
எதிர்நோக்கி பயணிக்க
நீ கிடைப்பதோ சிலருக்கு மட்டும் !

உன்னை நேசித்தவர்களும் வென்றிருக்கிறார்கள்
நீ நேசித்தவர்களும் வென்றிருக்கிறார்கள்
என்று நீ எனக்கு கிடைப்பாய் பெண்ணே
"என் முயற்சிகளின் "வெற்றியாய்"
"என் லட்சியத்தின் "சாதனையாய்"!

எழுதியவர் : வினாயகமுருகன் (16-Dec-12, 9:49 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 160

மேலே